குறிக்கோள்
பிஸ்பினா-ஐ என்பது நேரடி நிதித் திட்டமாகும், இது இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு குறிப்பாக வழங்கப்படுகிறது.
நிதி நோக்கம்
வேலை மூலதனம் மற்றும்/அல்லது சொத்து வாங்குதல்
குறிப்பு: வழங்கப்படும் நிதி உதவி மறுநிதி கடன் வசதிக்காகப் பயனபடுத்தக்கூடாது.
அடிப்படைத் தகுதி
- தேசிய SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும்)
- மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட மற்றும் மலேசியரால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சொந்தமான வணிகம் (குறைந்த பட்சம் 51% பங்கு முதலீடு);
- இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சி.ஜி.சியின் நிதி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாகதாகும்.
நிதி அளவு
- குறைந்த பட்சம் : ரி.ம . 20,000
- அதிக பட்சம் : ரி.ம . 200,000
வசதி வகை
கால நிதி மட்டுமே
வட்டித் தொகை
3.50% ஒரு வருடத்திற்க்கு
நிதி காலம்
5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் வரை (அசல் மற்றும் லாபம் இரண்டிலும் 6 மாத கால அவகாசம்)
விண்ணப்ப நடைமுறைகள்
- விண்ணப்ப படிவம் அனைத்து சி.ஜி.சியின் கிளைகளிலும் கிடைக்கும் அல்லது விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்
- அனைத்து ஆதரவு ஆவணங்களுடன் பூர்த்திச் செய்த விண்ணப்பப் பாரத்தை எந்த சி.ஜி.சியின் கிளைகளிலும் சமர்ப்பிக்கலாம்
* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்