Flexi Guarantee திட்டம் (FGS)

FGS (Flexi Guarantee Scheme) எனும் திட்டம் அனைத்து பொருளாதார துறைகளைச் சார்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (SMEs) வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நிதி செலவினங்களுடன், நிறைவான கடன் வசதிகளை வழங்குகிறது.

இது மலேசிய தேசிய வங்கியின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

முக்கிய பண்புகள்

இன் பிரதான முக்கிய பண்புகள் இவை:

  • பங்கு பெறும் நிதி நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதற்கு ஏற்ப 30% – 80% வரையிலான உத்தரவாதம் வழங்கப்படும்
  • வருடாந்திர உத்திரவாதக் கட்டணம் வழங்கப்பட்ட உத்தரவாதம் முன்கூட்டியே செலுத்த வேண்டியதன் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.(பங்கு நிதி நிறுவனங்கள் மூலம் கட்டணம் செலுத்தப்படும்)
  • பாதுகாக்கப்பட்ட பகுதி – ஆண்டுக்கு 0.50% முதல் 1.85%
  • பாதுகாப்பற்ற பகுதி – ஆண்டுக்கு 0.80% முதல் 2.15%

  • i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல்

    புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய உத்தரவாத கடிதம்(LG) வழங்கப்பட்ட பின் இக்கட்டணம் செலுத்தப்படும்
    ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன், கட்டணம் செலுத்த வேண்டும்

    ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்:


    மாத அடிப்படை மதிப்பீட்டில் உத்தரவாத கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட மாதம் முதல் உத்தரவாத நிறைவு நாள் வரைபயன்படுத்திய காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது
    2 ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பீடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தைத் திருப்பி தருகிறத

    பங்கு பெறும் நிதி நிறுவனங்களால் அக்கட்டணம் செலுத்தப்படும்

    விண்ணப்பிற்கும் முறைகள்


    கடன் விண்ணப்பம், எல்லா பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் மூலம் செய்யப்படலாம். பங்கு பெறும் நிதி நிறுவனங்களின், பாதுகாப்பு மற்றும் வழக்கமான விண்ணப்ப முறை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படும்.

    SME-அனைத்து பொருளாதார துறைகள்


    கடன் நோக்கம்

    உற்பத்தித் திறன் விரிவாக்கம்; அல்லது/மற்றும்
    மூலதனம்

    இவற்றிக்கு நிதி பயன்படுத்தப்படக்கூடாது


    பங்குகளை வாங்குதல்;
    தற்போதுள்ள கடன் / நிதியளிப்பு வசதிகளை மறுநிதியளித்தல்;
    நிலத்தை வாங்குதல் / ரியல் எஸ்டேட் முதலீடு;
    சொத்து அபிவிருத்தி;
    முதலீட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு;
    வர்த்தகத்தில் பங்கு முதலீடு செய்யும் பணிகள் (கடன், குத்தகை, கார்ப்பரேஷன் மற்றும் காப்பீடுநிறுவனங்கள்உட்பட);
    சூதாட்டம், மதுபானம், புகையிலையோ அல்லது அதன் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்; மற்றும்
    ஷரியா உடன்பாடு-அல்லாத வணிக நடவடிக்கைகள்

    தகுதி வரம்பு


    SME களின் பொருளாக்க வரையறைக்குள் கொண்டிருக்க வேண்டும்((விவரங்களுக்கு, தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்);
    மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM); அல்லது சபா மற்றும் சரவாக் மாவட்ட அலுவலகம் / அதிகாரத்தில் உள்ளவர்கள்; அல்லது நிபுணத்துவ சட்டரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும்;
    பங்குதாரரின் நிதி RM5 மில்லியனுக்கும் அதிகமில்லாமல் இருக்க வேண்டும்;
    சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்(SME) ,பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பங்கு விகிதம் 20%-க்குள் உட்பட்டிருக்க வேண்டும்;
    மலேசியாவில் வாழும் மலேசியர்கள் மற்றும் குறைந்தபட்சம் SME களில் 51% பங்குகளை வைத்திருக்க வேண்டும்;

    தகுதியான துறைகள் : அனைத்து பொருளாதார பிரிவுகளும் பொருந்தும் .(முதன்மை விவசாயத் துறை மற்றும் சிறு தொழில்கள் தவிர)

    அதிகபட்ச நிதி விகிதம் : ஆண்டுக்கு 6.00%-8.00% வரை
    அதிகபட்ச காலம் : 5 ஆண்டுகள் வரை
    குறைந்தபட்ச நிதி : குறைந்தபட்ச தொகை இல்லை
    அதிகபட்ச நிதி : RM5 மில்லியன் வரை

    பங்கு பெறும் நிதி நிறுவனங்கள் (PFIs)


    பின்வருமாறு வரையறுக்கப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்கள்களும் இதில் அடங்கும்:

    நிதி சேவைகள் சட்டம் 2013 (FSA) கீழ் உரிமம் பெற்ற வங்கிகள்;
    இஸ்லாமிய நிதி சேவைகள் சட்டம் 2013 (IFSA) கீழ் அனைத்து உரிமம் பெற்ற இஸ்லாமிய வங்கிகள்;
    மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் சட்டம் 2002 (DFIA) கீழ் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வளர்ச்சி நிதி நிறுவனங்கள்