1. கடன் உத்தரவாத கழகம் (சி.ஜி.சி)-யின் பங்கு என்ன?
நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) முன்னணி கடன் உத்தரவாதம் வழங்குவதோடு குறிப்பாக போதிய இணை இல்லாமலும் அடகு வைப்பதற்கு எதுவும் இல்லாமலும் அரசாங்கத்தின் ஊக்குவிப்பு முயற்சி மற்றும் வணிக பொருளாதாரம் வளரும் வகையில் சி.ஜி.சி கடன் உத்தரவாதம் வழங்குகிறது.
2. சி.ஜி.சி எவ்வாறு சி.ஜி.சி நிறுவனங்களுக்கு (SMEs) உதவுகின்றது?
- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) RM 10 மில்லியன் வரை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற கடன் வசதிகளை உத்தரவாத பாதுகாப்பின் வழி சி.ஜி.சி உதவுகின்றது.
- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு உத்தரவாத திட்டங்களும் தேவையான கடன் வசதிகளையும் சி.ஜி.சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. சி.ஜி.சி-யில் சிறந்த உத்திரவாத திட்டங்கள் யாவை?
- நீங்கள் கடன் வசதி விண்ணப்பம் செய்யும் போது, சி.ஜி.சி செயலாக்கம் மற்றும் மதிப்பீடு நடவடிக்கை மூலம் கடன் உத்தரவாதம் அல்லது கடன் வசதியைச் செய்து தருகின்றது. இதற்கு ஒரு தனி விண்ணப்பம் அவசியம் இல்லை.
- சி.ஜி.சி உங்கள் வியாபாரத்திற்கான உத்தரவாத்தை வணிக நம்பகத்தன்மையில் மூலமும் ஏதேனும் இணைமதிப்பின் அடிப்படையிலும் கடன் வழங்குகிறது.
- சிறிய மற்றும் நடுத்தர நடைமுறைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சி.ஜி.சி மலேசியா தொழில் தேவையைப்பூர்த்தி செய்கின்றது.
4. எவ்வாறு நான் சி.ஜி.சி-யில் உத்தரவாத கடன் பெறுவதற்கு தகுதி பெறுவது?
நீங்கள் மலேசியா குடிமகனாக அல்லது உத்தரவாத கடன் பெறுவதற்கு தகுதி பெறுவது.
- நீங்கள் மலேசியா குடிமகனாக அல்லது குடியுரிமை கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக இருந்தால் தகுதி பெறலாம்.
- உத்திரவாத திட்டங்களைப் பெற வருடாந்த விற்பனை அல்லது உரிமம் பெற்ற வணிக கடன் ஆகியவை தேவை.
5. எத்தனை உத்திரவாத திட்டங்களை சி.ஜி.சி-யில் மூலம் பெறலாம்?
தற்போது சி.ஜி.சி பல்வேறு வாடிக்கையாளர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 12 வெவ்வேறு உத்திரவாத திட்டங்களை வழங்குகிறது. உங்களின் தகுதிக்கு ஏற்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் பட்டியலை பார்க்கவும். இந்த பகுதியிலிருந்து, நீங்கள் தேர்வுச் செய்த திட்டத்தைப் பற்றி மேலும் படித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.
6. எவ்வாறு நான் சி.றி.சி.யின் கடன் வசதியை விண்ணப்பம் செய்வது?
- பங்குரிமைஎக்செல் (BizMaju), தொழில்முனைவர்நிதிதிட்டம் (BumiputeraEnterpreneur Project Fund)-i (TPUB-i)), நேரடிதொடக்கஉத்தரவாததிட்டம் (Guarantee Scheme Start-up (DAGS Start up)) மற்றும் Bizmula-I போன்ற கடன் வசதிக்கு அருகிலுள்ள சி.ஜி.சி கிளையை அணுகலாம்.
- சி.ஜி.சி செயலாக்கம் மற்றும் மதிப்பீடு நடவடிக்கைகள் மூலம் கடன் உத்தரவாதத்தை பிற கடன் வசதிகளுக்கு செய்து தருகிறது. இதற்கு ஒரு தனி விண்ணப்பம் அவசியம் இல்லை.
- தற்போது, நாடு தழுவிய அளவிய 16 சி.ஜி.சி கிளைகள் உள்ளன. அதே நேரத்தில், சி.ஜி.சியை பிரதிநிதித்து வணிக வங்கி மூலம் நாடு முழுவதும் 2,600 கிளைகள் உள்ளன. ஆகையால், எப்பொழுதும் சி.ஜி.சி-யின் உதவியை எளிதாக அருகியுள்ள கிளைகளில் பெறலாம்.
- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அதன் சார்பாக நிதி பெறுவதற்காக செயல்பட, சி.ஐி.சி வேறு எந்த மூன்றாம் தரப்பினர் / முகவர் நியமிக்கவில்லை. தயவு செய்து எங்கள் வாடிக்கையாளர் சேவை மையம் 03-7880 0088 அல்லது அருகில் உள்ள கிளைகளின் வழி தொடர்பு கொள்ளவும்.
7. உத்திரவாதம், நிதியுதவி அல்லது அரசு நிதியுதவி திட்டங்கள் ஆகியவற்றிற்கு நான் விண்ணப்பிக்கும்போது சி.ஜி.சி.- யின் செயலாக்க கட்டணம் உள்ளதா?
எங்கள் உத்தரவாதத் திட்டங்களுக்கும் நிதியுதவி மற்றும் அரசு நிதியுதவி திட்டங்களுக்கும் எந்தவொரு செயலாக்க மற்றும் புதுப்பித்தல் கட்டணங்கள் இல்லை.
8. சி.ஜி.சி மற்றும் நிதி நிறுவனங்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
இணை குறிப்பு இல்லாமல் இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்குவது சி.ஜி.சி-யின் முக்கியபங்காக அமைகிறது. மறுபுறம், நிதி நிறுவனங்கள் கடன்கள் மற்றும் நிதிசேவைகளை நேரடியாக கடன் பெறுபவர்களிடம் வழங்குகின்றார்கள்.
மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வழங்கும் வரிசையில், குறிப்பாக பிணையில்லாத சில குழுவினர்களுக்கு நேரடியாக கடன் வழங்குவதற்கு சி.ஜி.சி-யின் 16 கிளைகள் உள்ளன.
9. எவ்வகை வணிகங்கள் சி.ஜி.சி-விடம் உத்தரவாதப் பாதுகாப்பை விண்ணக்க முடியும்?
அணைத்து பதிவு பெற்ற வணிகங்களும் உத்தரவாதப் பாதுகாப்பை விண்ணப்பிக்கலாம் எனினும், நாங்கள் வியாபரத் தன்நம்பகத்தன்மையின் அடிப்படையில் விண்ணபத்தை மதிப்புடு செய்கின்றோம்.
10. நான் ஒரு வருடத்திற்கும் குறைவாக வணிகம் செய்து வருகிறேன். நான் சி.ஐி.சி-யின் வணிக கடன் திட்டத்தை விண்ணப்பிக்க முடியுமா?
முடியும். நீங்கள் வணிக திட்டத்தை சி.ஐி.சி அல்லது நிதி நிறுவனங்களிடம் சரியான வணிக திட்ட ஆவணங்கள் மற்றும் பணப்புழக்கத் திட்ட ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்யலாம். எனினும், சி.ஐி.சி மற்றும் நிதி நிறுவனங்கள் இறுதி முடிவுகளை சில நிர்பதனைகளுக்கு உட்பட்டு கடன் வசதியைச் செய்து தரும்.
11. நான் வாகனங்கள் மற்றும் நிலங்கள் நிறுவனத்தின் மீது வாங்க கடன் விண்ணப்பிக்க முடியுமா?
முடியாது. வணிக உத்தரவாத நோக்கத்திற்காகவும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் மட்டுமே சி.ஐி.சி-யின் நோக்கமாகும்.
12. எந்த நிதி நிறுவனங்களில் சி.ஐி.சி-யின் உத்தரவாதத் திட்டங்கள் உள்ளன ?
அனைத்து வழக்கமான மற்றும் இஸ்லாமிய வங்கிகளில் மற்றும் வளர்ச்சியடைந்த நிதி நிறுவனங்களில் எங்கள் உத்திரவாத திட்டங்கள் உள்ளன.
13. நான் சில நிதி நிறுவனங்களை அனுகியுள்ளேன். ஆனால், அவர்கள் சி.ஐி.சி-யின் கடன் விண்ணப்பத்தை ஏற்க மறுப்பதற்கு காரணம் என்ன ?
நம்பகத்தன்மையற்ற வாணிகம், போதிய ஆவணங்கள் இல்லாமை மற்றும் நிதி நிறுவனத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாவிடில், நிதி நிறுவனத்திற்கு விண்ணப்பதை நிராகரிக்க உரிமை உண்டு.
14. ஒரு கடன் உத்திரவாதம் விண்ணப்பிப்பதற்கான தேவையான ஆவணங்கள் யாவை ?
சி.ஐி.சி-யின் கிளைகள் மூலம் விண்ணப்பம் செய்யலாம். மற்றும் அனைத்து சி.ஐி.சி கிளைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையத்திலும் ஆவணம் சரிபார்ப்பு பட்டியலைப் பார்க்கவும். நீங்கள் சி.ஐி.சி-யின் இணையதளத்திலும் ஆவணம் சரிபார்ப்பு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம். நிதி நிறுவனத்தின் வழி விண்ணப்பம் செய்பவர்கள், அந்தந்த நிதி நிறுவனத்திலிருந்து ஆவணம் சரிபார்ப்பு பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.
15. நான் தேவையான ஆவணங்களை வழங்க முடியாவிடில் சி.ஐி.சி என் விண்ணப்பத்தை நிராகரிக்கப் படுமா ?
ஆவணங்கள் முழுமையாக இல்லாமை மற்றும் முழுமையான தகவல் இல்லாத விண்ணப்பத்தை சி.ஐி.சி ஏற்றுக் கொள்ளாது.
16. பொதுவாக, என்ன காரணங்களால் ஒரு உத்தரவாத விண்ணப்பம் சி.ஐி.சி நிறுவனத்தால் நிராகரிக்கப்படுகிறது ?
பொதுவாக, கிரெடிட் ஸ்கோரிங் அடிப்படை சந்திக்க முடியாமை மற்றும் பாதகமான வரலாறு உள்ள நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
17. எனக்கு செலுத்தப்படாத கடன் இருப்பின், நான் மற்றொரு உத்தரவாத திட்டத்தை மற்றொரு நிதி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பிக்க முடியுமா ?
- முடியும். நீங்கள் சி.ஐி.சி-யின் கோட்பாட்டை சந்திப்பதோடு மொத்த பங்கின் கட்டுபாட்டை முழுமையாகப் பயன்படுத்திருக்க வேண்டும்.
- சி.ஐி.சி திட்டங்களின் கீழ் வெவ்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து மூன்றுக்கு மேற்பட்ட தனி கடன் பாக்கிகள் தாண்ட வண்ணம் இருந்தால் கடனாளி தகுதி கோட்பாட்டைச் சந்திப்பார்.
18. இதற்கு முன்பு, நான் சி.ஐி.சி-யில் கடன் பெற்று, முழுமையாக கடனை செலுத்தி விட்டேன். நான் மற்றொரு கடன் விண்ணப்பிக்க முடியுமா ? அதை எவ்வாறு விண்ணப்பம் செய்யலாம் ?
ஆமாம். நீங்கள் பின்வரும் தடங்கள் வழியாக மற்றொரு உத்தரவாத வசதியை விண்ணப்பிக்கலாம் :
- நீங்கள் சி.ஐி.சி கிளைகள் அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்கள் வழி உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
- நிதி நிறுவனங்கள் வழி ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் :
நீங்கள் ஒரு பொருத்தமான திட்டத்தையும், கடன் வசதிகளையும் மற்றும் உத்தரவாத பாதுகாப்பும் பெருவதற்கு அருகாமையிலுள்ள நிதி நிறுவனங்களின் கிளைகளை நாடலாம்.
19. என்னுடைய கடன் வசதியின் வரம்பு அதிகரிப்பு விண்ணப்பிக்க வழிமுறைகள் என்ன ?
- அருகிலுள்ள சி.ஐி.சி கிளையில் இருக்கும் வசதிகளைப் பெற்று, அக்கிளைகள் வழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
- நிதி நிருவனங்களில் இருக்கும் வசதிகளைப் பெற்று, அந்நிறுவனங்கள் வழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
20. சி.ஐி.சி-யின் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் காலத்தை நீடிப்பதற்கு சாத்தியம் உள்ளதா ?
முடியும். சி.ஐி.சி கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழி நீங்கள் விண்ணப்பக் கோரிக்கையை சி.ஐி.சி -க்கு சமர்ப்பிக்கலாம்.
21. எவ்வாறு என் மாத கடன் தொகை மற்றும் கட்டணம் செலுத்தும் அட்டவணையை கடன் கணிப்பொறி மூலம் கணக்கிடுவது ?
கடன் விண்ணப்பிக்கும் ஆர்வம் இருந்தால், நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் மாத தவணை அல்லது பண அட்டவணையை கடன் கணிப்பொறி மூலம் ஒரு ஆலோசனையாகப் பெறலாம்.
கடன் கணிப்பொறியை பயன்படுத்த பின்வரும் தகவல்கள் உங்களுக்கு தேவை :
- கடன் தொகை: இது நீங்கள் விண்ணப்பிக்கும் மொத்த தொகையாகும். இதில் வட்டி அல்லது கட்டணங்கள் ஆகியவை சேர்த்துக் கொள்ளவில்லை.
- மாத வட்டி விகிதம்:இந்த வங்கி வழங்கிய வட்டி வீதம், உங்களுக்கு கொடுக்கும் கடன் காலத்தை குறிக்கும்.
- மாத தவணை செலுத்தும் காலம்:இந்த கடன் காலம்- நீங்கள் கடன் வழங்கப்பட்ட நாள் முதல் கடனைச் செலுத்தி முடிக்கும் காலம் வரையாகும்.
- கடனை திருப்பி செலுத்தும் அட்டவணை: “ஆம்” என்று கிளிக் செய்தால், முழுமையான கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணையைப் பார்க்கலாம். இது உங்களின் கடன் மாத தவணையையும் ஒவ்வொரு மாத இறுதியிலும் கடன் மீதம் மற்றும் வட்டி ஆகியவற்றைக் கொடுக்கும்.“இல்லை” என்று கிளிக் செய்தால், உங்கள் மாத கட்டணம் செலுத்தும் தொகையைக் காட்டும். “கணக்கிடுதல்” என்று கிளிக் செய்தால், நீங்கள் கோரிய தகவல்களைப் பெறலாம்.