BizWanita-i

நோக்கம்

Bizwanita-i, 4 ஆண்டுகளுக்குக் குறைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் தொழில்முனைவர்களுக்கான நேரடி நிதியுதவி திட்டம். இத்திட்டம் தேசிய வங்கியின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியுதவியைக் கொண்டு இயங்குகிறது- அனைத்து பொருளாதார துறைகளுக்கும் (AES).

நிதியுதவி நோக்கம்

* வேலை மூலதனம்; மற்றும்/அல்லது
* சொத்து வாங்குதல் (எ.கா: உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குதல்)

இவற்றிற்கு நிதியதவி பயன்படுத்தப்படக் கூடாது

* பங்குகள் வாங்குதல்
* தற்போதுள்ள கடன் / நிதியுதவி வசதிகளை மறுநிதியளித்தல்
* நிலம் வாங்குதல்/ ரியல் எஸ்டேட் முதலீடு
* வணிக சொத்துகள் வாங்குதல்
* சொத்து வளர்ச்சி
* முதலீட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு
* வர்த்தகத்தில் பங்கு முதலீடு செய்யும் பணிகள் (கடன், குத்தகை, கார்ப்பரேசன் மற்றும் காப்பீடு நிறுவங்கள் உட்பட)
* சூதாட்டம், மது, புகையிலை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள் அல்லது

விண்ணப்பதாரர் தகுதி வரம்புகள்

* தேசிய SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும்)
* வர்த்தகம் மலேசியர் கட்டுப்பாடு மற்றும் உரிமைத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்டிருக்க வேண்டும்), அதோடு வர்த்தகம் மலேசியாவில் அமைந்திருக்க வேண்டும்.
* நிறுவனங்கள் அல்லது வர்த்தகங்களில் பெண்/ பெண்கள் குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்டிருப்பதோடு விணணப்பிக்கும் சமயத்தில் முக்கிய முடிவெடுக்கும் நபர் பெண்ணாகவும் இருக்க வேண்டும்.
* வர்த்தக பதிவு மற்றும்/ஈடுபாடு 4 ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
* முக்கிய முடிவெடுக்கும் நபர்/ வாரிசு விண்ணப்பிக்கும் சமயத்தில் குறைந்தபட்சம் 21 வயதிற்குட்பட்டவராகவும், முழு தவணைச் செலுத்தும் சமயத்தில் 65 வயதிற்குட்பட்டும் இருக்க வேண்டும்.
* வர்த்தகம் மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM); அல்லது சபா மற்றும் சரவாக் மாவட்ட அலுவலகம்/அதிகாரிகள்; அல்லது நிபுணத்துவ சட்ட ரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும்.
* சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் (ஏதேனும் இருந்தால்) பங்குகள் 20%-கும் மேற்போகாமல் இருக்க வேண்டும்.

நிதியுதவித் தொகை

* குறைந்தபட்சம் – RM30,000
* அதிகபட்சம் – RM300,000

நிதியுதவி வகை

* தவணைக்குட்பட்ட நிதியுதவி

நிதி விகிதம்

* இலாப விகிதம்: ஆண்டுக்கு 6.80%

நிதியுதவி தவணைக்காலம்

* 5 ஆண்டுகள் வரை

விண்ணப்பிகிகும் முறை

* சி.ஜி.சி.யின் அனைத்து கிளைகளிலும் விண்ணப்ப படிவம் கிடைக்கும் அல்லது விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய இந்த விசையை அலுத்தவும் <ahref=”https://www.cgc.com.my/download-forms?lang=ta”>.
* முழுமையான விண்ணப்ப பாரங்களை துணை ஆவணங்களோடு இணைத்து எந்த CGC கிளைகளிலும் சமர்ப்பிக்கலாம்.