BizJamin திட்டம்

தகுதி வரையறைகள்

  • வர்த்தகம் மலேசியர் கட்டுப்பாடு மற்றும் உரிமைத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்டிருக்க வேண்டும்), அதோடு வர்த்தகம் மலேசியாவில் அமைந்திருக்க வேண்டும்.
  • SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும்)

அதிகபட்ச கடன் வரம்பு

RM15.0 மில்லியன் வரை கடன் பெறலாம்.

கடன் வசதிகள்

  • தவணைக் கடன்
  • மிகைப்பற்று
  • கடன் சான்று
  • அறக்கட்டளை ரசீது
  • வாங்கப்பட்ட ரசீது
  • வங்கி உத்தரவாதம்
  • ஏற்றுமதி கடன் மறுநிதியளித்தல்
  • வங்கியாளர்கள் ஏற்பு
  • ஷிப்பிங் உத்தரவாதம்
  • வாகன கடன்
  • குத்தகை
  • CGC அவ்வப்போது தீர்மானிக்கும் மற்ற கடன் வசதிகள்

கடன் விகிதம்

வருடாந்திர வட்டி விகிதம் நிதி நிறுவனங்களின் அடிப்படை கடன் விகிதம் (BLR) க்கு 2% வரை இருக்கும்.

    * உத்தரவாதம் 50% அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், நிதி நிறுவனங்கள் வட்டி விகிதத்தை மேற்கோள் காட்டலாம்

பங்கேற்கும் நிதி நிறுவனம்

  • அனைத்து அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் (DFI) மற்றும் வர்த்தக வங்கிகள்

உத்தரவாத பாதுகாப்பு

      • CGC-யின் உத்தரவாதம் 30% முதல் 90% வரை

      • வழங்கப்படும். இது பின்வரும் நிபந்தனைகக்குளுக்கு உட்பட்டது.
      • பாதுகாப்பற்ற பகுதி – 80% வரை (அதிகபட்ச உத்தரவாதம் RM5.0 மில்லியன்)
      • பாதுகாக்கப்பட்ட பகுதி- 90% வரை (பாதுகாக்கப்பட்ட பகுதி மீது எந்த உச்ச வரம்பும் இல்லை)
    •  

உத்தரவாத கட்டணம்

    • பாதுகாப்பற்ற பகுதி- ஒரு வருடத்திற்கு 0.75% முதல் 4.00 % வரை.
    • பாதுகாக்கப்பட்ட பகுதி- ஒரு வருடத்திற்கு 0.50% முதல் 3.20 % வரை.
    • அதிக ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாத கட்டணம் உயர்வாக அறிவிக்கப்படும். அதே சமயம், குறைந்த ஆபத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த உத்தரவாத கட்டணம் அறிவிக்கப்படும். உத்தரவாத விலை வரம்பை கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை மற்றும் ரிஸ்க் ரேட்டிங் அடிப்படையில் கவனித்து அனுசரிக்கப்பட்டது.
    • i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல்.

    • புதிய உத்தரவாத கடிதம்(LG) – நிதி நிறுவனத்தின் கோரிக்கைக்குப் பின் புதிய உத்தரவாத கடிதம்(LG) அடிப்படையில் செலுத்தப்படும்.
    • ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதியன்று அல்லது முன், வருடாந்திர கட்டணத்தோடு செலுத்தப்படும்.
    • ii) உத்தரவாத கட்டணத் தொகையை திருப்பிக்கொடுத்தல்

    • மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதக் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும்.
    • இரத்து செய்யப்பட்ட அல்லது உத்தரவாத கடிதம் திருத்தப்பட மாதம் முதல் அதன் நிறைவு நாள் வரை நடப்பில் இல்லாத காலத்தை இது கணக்கில் கொள்கிறது.